“இப்படி விளையாண்டா நெதர்லாந்த கூட ஜெயிக்க முடியாது”- பாக். அணியை லெஃப்ட் ரைட் வாங்கிய முன்னாள் வீரர்

இந்தியாவிற்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் 128 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது.
Kamran Akmal
Kamran Akmalpt web
Published on

கொழும்பில் உள்ள பிரேமதாச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மென் இன் கிரீன் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியிருந்த பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

Ind vs Pak
Ind vs Pak

இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் இந்தியாவிற்கு எதிராக டஃப் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் யாதவின் அற்புதமான பந்துவீச்சில் 128 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான். 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஃபகர் ஷமான் 50 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்தார். மற்ற பாகிஸ்தான் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாட்டை முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரான் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நெதர்லாந்து அணியை கூட வீழ்த்த சிரமப்படுவீர்கள்!

பாகிஸ்தான் வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து விமர்சித்திருக்கும் கம்ரான், “ஆசியக்கோப்பையையும் உலகக்கோப்பையையும் வெல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவேண்டும். இது போன்ற ஒரு பேட்டிங்கை வைத்துக்கொண்டு உங்களால் நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது. நிர்வாகம் என்ன செய்கிறது? என்று புரியவில்லை.

டாஸை வென்று முதலில் பந்து வீசச் சொன்னால் மட்டும் போதாது, குறைந்த பட்சம் வீரர்களுக்கு கிரீஸில் நின்று விளையாடத்தெரிய வேண்டும். உங்களின் ரன் சேர்க்கும் விகிதம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக கூட உங்களால் 190 ரன்களை 40 ஓவரில் தான் சேஸ் செய்ய முடிந்தது” என்று அக்மல் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

மேலும் “இந்தியா போன்ற ஒரு பெரிய அணியோடு விளையாடுவதற்கான எந்த திட்டமும் இல்லை. சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மெனக்கெடலும் இல்லை. ஏதோ வந்தோம் ஆடினோம் சென்றோம் என்பது போலவே வீரர்கள் விளையாடினர். வீரர்கள் அனைவரும் விடுமுறை சுற்றுலாவுக்குக்கு சென்றுள்ளனர் என்று நினைக்கிறேன். இதை சொல்வதில் நான் மிகவும் வருந்துகிறேன், நீங்கள் ஒரு சிறந்த அணிக்கு எதிராக பள்ளி சிறுவர்களைப் போல் செயல்பட்டீர்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com