இதோ செஞ்சுட்டேன்ல.! ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சதம் விளாசல்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ’ரூட்’!
ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். 2025-26 ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 பவுண்டரிகளுடன் 40வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஆஸ்திரேலியாவில் சதமடிக்காத ரூட், தனது மோசமான ரெக்கார்டை உடைத்தார்.
2025-26 ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்னரே, ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட் எப்படி விளையாடப்போகிறார் என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது. இதுவரை 39 சர்வதேச டெஸ்ட் சதங்களை அடித்திருக்கும் ரூட், ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆஸ்திரேலியா மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 சராசரியுடன் 9 அரைசதங்களை மட்டுமே அடித்திருந்தார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 89-ஆகவே இருந்துவந்தது..
இந்தசூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் உலகசாதனையை எட்டிப்பிடிக்கும் இடத்தில் இருக்கும் ஜோ ரூட், ஆஸ்திரேலியா மண்ணில் சதமே அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை உடைப்பாரா என்ற ஆவல் அதிகரித்தது..
மேலும் அவர் தன்னுடைய பிரைம் ஃபார்மில் தொடர்ந்து இருந்துவரும் நிலையில், நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் ஜோ ரூட் சதமடிக்கவில்லை என்றால் நான் MCG மைதானத்தில் நிர்வாணமாக சுற்றிவருவேன் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். அது இணையத்தில் பேசுபொருளாகவும் மாறியது..
முதல் சதத்தை அடித்தார் ஜோ ரூட்..
ஜோ ரூட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 0 மற்றும் 8 ரன்களில் வெளியேறி மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்..
இந்தசூழலில் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 பவுண்டரிகள் உதவியுடன் முதல் சதத்தை பதிவுசெய்து சாதனை படைத்தார் ஜோ ரூட்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருடைய 40வது சதமாக பதிவுசெய்யப்பட்டது.. ஆஸ்திரேலியா மண்ணில் சதமடித்ததே இல்லை என்ற தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரூட்..
இங்கிலாந்து அணி 68 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டார் 6 விக்கெட் எடுத்துள்ளார்.

