“Thalaiva will grace World Cup”- ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கினார் ஜெய் ஷா!

“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் ரஜிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ வழங்கி கவுரவித்துள்ளது.
Rajini - Jay shah
Rajini - Jay shahTwitter

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இன்னும் 15 நாட்களே மீதமிருக்கும் நிலையில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்திய ஸ்டார்களுக்கு போட்டியைக் காண அழைப்பு விடுத்து வருகிறது.

அதன்படி ஏற்கெனவே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கி கவுரவித்தார். இரண்டு முக்கிய நட்சத்திரங்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் 3வது கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

ரஜிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார் ஜெய் ஷா!

மூன்றாவது கோல்டன் டிக்கெட்டை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கியிருப்பது குறித்து, பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், “மொழிகளை கடந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத முத்திரையை பதித்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் 2023 உலகக்கோப்பையின் ஒருபகுதியாக இருக்கப்போகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

கோல்டன் டிக்கெட் என்றால் என்ன?

“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஐகானிக் நபர்களை பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பைக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

Sachin - Jay Shah
Sachin - Jay Shah

ஆமா, அதென்ன கோல்டன் டிக்கெட்?

சில நபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருந்தினர் பாஸ்தான் கோல்டன் டிக்கெட் எனப்படும். இதன் மூலம் அவர்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்கு விஐபி அணுகலைப் பெறுகிறார்கள். இந்தியாவின் பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட ஐகானிக் நபர்களை அழைக்கும் விதமாகவும், உலகக்கோப்பையை சிறப்பானதாக மாற்றும் விதமாகவும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகக்கோப்பைக்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் பிசிசிஐ மற்ற துறைகளில் உள்ள பல்வேறு ஐகான்களுக்கும் இதே போன்ற பாஸ்களை வழங்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com