இங்கிலாந்துக்கு எதிராக 90 சராசரி.. டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்!
ரோஹித் சர்மா... விராட் கோலி... ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால், இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து தொடரை எதிர்கொண்டுள்ளது.
லீட்சில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசி நம்பிக்கை அளித்துள்ளனர்.
குறிப்பாக, தனது நேர்த்தியான ஆட்டத்தால் சதம் விளாசியுள்ள ஜெய்வால் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்!
முதல் இன்னிங்சில் 101 ரன்களை அடித்த ஜெய்ஸ்வால், இங்கிலாந்து எதிராக 10 இன்னிங்சில் 813 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 90.33 ரன்கள் ஆகும்.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் இங்கிலாந்து எதிராக 63 இன்னிங்சில் விளையாடி ஐந்தாயிரத்து 28 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 89.78 ரன்கள்.
அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் சராசரியை பெற்றுள்ள முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெய்ஸ்வால்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக களம் இறங்கிய தனது முதல் டெஸ்ட் போட்டியில், சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் 161 ரன்களை குவித்திருந்தார் ஜெய்ஸ்வால். சுப்மன் கில் தலைமையில் சிறப்பாக விளையாட முடிவதாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.