\
Ireland First Histroy Record in Won the first T20I Vs India
ind vs irebcci

IND Vs IRE | வரலாற்றில் முதன்முறை.. அயர்லாந்திடம் பணிந்த இந்தியா.. பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ்!

இந்திய அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்களையும், அக்‌ஷர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
Published on

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அவ்வணியுடன் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, அயர்லாந்தை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து, அவ்வணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டக்கர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதேபோல் கராத் டெல்னி 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்களையும், அக்‌ஷர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சஞ்சு சாம்சன் (5), இஷான் கிஷன் (1), ஸ்ரேயாஸ் ஐயர் (3) ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது.

Ireland First Histroy Record in Won the first T20I Vs India
IND vs IRE | இந்தியா vs அயர்லாந்து முதல் டி20: இந்திய அணியின் பாசிடிவ்களும்.. நெகடிவ்களும்..!

எனினும், அபிஷேக் சர்மா தனி ஒருவனாகப் போராடினார். அவர் 49 ரன்கள் எடுத்தார். அதேபோல் திலக் வர்மாவும் (19) ஷிவம் துபேவும் (25) போராடினர். எனினும் பின்னர் வந்த வீரர்கள் ரன் எடுக்கத் தவறியதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தவிர, இந்திய அணி முதல்முறையாக அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்து சரித்திரம் படைத்துள்ளது.

shreyas iyer
shreyas iyer

இதற்கு முன்பு அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய 11 சர்வதேச போட்டிகளிலும் இந்தியா வென்றிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், இந்திய கேப்டன்கள் தங்கள் முதல் T20I போட்டியில் தோல்வியடைந்த பட்டியலில் ஸ்ரேயாஸும் ஐயரும் இடம்பிடித்துள்ளார். முன்னதாக 2017-இல் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராகவும் 2022-இல் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், அதே ஆண்டில் சுப்மன் கில் ஜிம்பாப்வேக்கு எதிராகவும் தோல்வி கண்டிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com