“முதல்லயே பந்துவீச விரும்புகிறேன்”.. போட்டிக்கு பின் பாண்டியாவுக்கு பும்ரா கொடுத்த நேரடி மெசேஜ்!

"இம்மாதிரியான டி20 போட்டிகளில் பந்து முதல் 2 ஓவர்களுக்கு மட்டும்தான் ஸ்விங் ஆகும் எனும் நிலையில், போட்டியில் முதலிலேயே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்” என மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.
பும்ரா - ஹர்திக்
பும்ரா - ஹர்திக்pt web

மும்பை பந்துவீச்சு மோசம்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி போராடி வெற்றி பெற்றது. மும்பை அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 14 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. அதனால், மும்பை அணி எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 111 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்ந்துவிட்ட போதும் போட்டி 180 ரன்களை கடந்து சென்றது. அந்த அளவிற்கு மும்பையின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. அஸுதோஷ் சிறப்பாக விளையாடி இருந்தாலும் மும்பை அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.

தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி, பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட தவறியதே ஆரம்ப போட்டிகளில் படுதோல்விக்கான காரணமாக அமைந்தது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவை தொடக்க ஓவர்களை வீச வைக்காமல் மிகவும் தாமதமாக கொண்டு வந்தார். அது மும்பை அணிக்கு பாதகமாக அமைந்தது.

சிறப்பாக செயல்படும் பும்ரா!

பின்னர், மெல்ல மெல்ல பவர் பிளேவுக்குள் கொண்டு வரப்பட்ட பும்ரா தற்போது ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இருந்து பந்துவீசி வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனிலேயே சிறப்பாக பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். 6 ரன்ரேட்டிற்கு கீழ் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். நேற்றையை போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதை வென்றப்பின் பேசிய பும்ரா, தான் தொடக்கத்திலேயே பந்துவீச விரும்புவதாக தெரிவித்தார்.

முன்கூட்டியே பந்துவீச விரும்புகிறேன்

பும்ரா பேசுகையில், “நாங்கள் நினைத்ததை விட போட்டி மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. முன்கூட்டியே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த வகையான டி20 போட்டிகளில் பந்து இரண்டு ஓவர்களுக்கு தான் ஸ்விங் ஆகும். அதனால் அந்த ஓவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பார்மெட் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. மேலும், நேரக்கட்டுப்பாடு மற்றும் இம்பேக்ட் விதிகள் இருக்கிறது. நீங்கள் எந்த அளவிற்கு தயார் ஆகி இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு சிறப்பான ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். ஆடுகளத்தில் எந்த மூளையில் இருந்தாலும் இந்த செய்தியை கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய செய்திகளை கொடுக்க தேவையில்லை” என்றார்.

பும்ராவின் இந்த பேச்சு கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்ட செய்தியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன்சியை பொறுத்தவரையில் கூட, நேற்று கடைசி 5 ஓவர்கள் ரோகித் சர்மா வசமே இருந்ததாக தெரிகிறது. பும்ரா, மத்வால் போன்றவர்கள் ரோகித் சர்மாவிடமே ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டனர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் என்றே கூறப்படுகிறது.

மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com