காயத்தால் அவதி: மேலும் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மேலும் 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கோலி, ஹர்திக் பாண்டியா
கோலி, ஹர்திக் பாண்டியாட்விட்டர்

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா, சறுக்கி விழுந்ததில் கணுக்காலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். காயத்திலிருந்து அவர் முழுமையாக மீளாததால் மேலும் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட இயலாத நிலை உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலி, ஹர்திக் பாண்டியா
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் விலகல்! உடற்தகுதி சோதனைக்கு பிறகே அடுத்த முடிவு!
Hardik Pandya
Hardik Pandyapt desk

பாண்டியா முழுமையாக குணமடைய அவகாசம் அளிக்கலாம் என்றும், நாக் அவுட்சுற்றுக்கு அவர் முழு உடல் தகுதி அடைய வேண்டும் என்பதால் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் ஓய்வளிக்கலாம் என்றும் அணி நிர்வாகம் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படாத பட்சத்தில் சூர்யகுமார் யாதவுக்கு மேலும் சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com