2026 மகளிர் ஐபிஎல் ஏலம்| 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி!
2026 மகளிர் பிரீமியர் லீக் ஏலம் வரும் நவம்பர் இறுதிவாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது..
2025 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. 3முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணியால் ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை.
இந்தசூழலில் 2026 WPL ஏலத்திற்கான தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
5 வீரர்களை தக்கவைக்கலாம்..
கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, 2026 மகளிர் பிரீமியர் லீக் ஏலமானது நவம்பர் 26 - 29ம் தேதிக்குள் நடத்தப்பட விருப்பதாகவும், ரீடெய்ன் குறித்த வீரர்கள் பட்டியல் நம்பர் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் வரும் ஏலத்தில் அணியை கட்டமைக்க 15 கோடிவரை செலவிடலாம் என்றும், 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.