\
india womens beat england in lords test
india womens beat england in lords testcricinfo

142 YEARS| லார்ட்ஸ் மைதானத்தில் முதல் மகளிர் டெஸ்ட்.. இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா!

உலகின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டி நடந்து 142 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட்டில் வென்ற அணியாக இந்தியா வரலாற்றில் தன் பெயரை பொறித்துள்ளது.
Published on
Summary

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்த இந்தியா, கிராந்தி கௌட் 5 விக்கெட் மாயாஜாலத்தால் இங்கிலாந்தை 170 ரன்களுக்கு சுருண்டது. யாஸ்திகா பாட்டியாவின் சதத்தால் இந்தியா 357 ரன்கள் இலக்கை நிர்ணயித்து, லார்ட்ஸில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.

டி20 தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வென்று அசத்தியது.

கிராந்தி கௌட்
கிராந்தி கௌட்

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் கிராந்தி கௌடின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டு ஆட்டமிழந்தது. 37 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிராந்தி கௌட் சாதனை படைத்தார்.

india womens beat england in lords test
’MS தோனி to ராகுல் டிராவிட்..’ அடுத்த சிஎஸ்கே பயிற்சியாளராக வாய்ப்புள்ள 5 பேர்!

இந்தசூழலில் 115 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை யாஸ்திகா பாட்டியா லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் வீராங்கனையாக வரலாறு படைத்தார்.

357 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 186 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்திய அணி, புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்து வரலாறு படைத்தது. இந்திய அணி டி20 வடிவத்தில் தடுமாறினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவத்தில் தாங்கள் சிறந்த அணி என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி பொன்னான வெற்றியாகும்.

india womens beat england in lords test
இங்கிலாந்து மண்ணில் முதல் வீராங்கனையாக வரலாறு.. இந்தியாவின் கிராந்தி கௌட் படைத்த அசாத்திய சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com