\
முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை
முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை Twitter | @MdShami11

“மீண்டு வர சிறிது காலமாகும்” - அறுவை சிகிச்சைக்குப்பின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Published on

காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முகமது ஷமி, குதிகாலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும் முழுமையாக மீண்டுவர சில காலம் ஆகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை
முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை

முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற முகமது ஷமி காயம் காரணமாக ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்றவில்லை.

அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியிலும் காயம் காரணமாக ஷமி விலகியுள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் சில மாதங்கள் ஷமி ஒய்வில் இருப்பார் என தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com