\
india won vs bangladesh t20 womens world cup
india wbcci

W 2026 WC |் எளிதில் வீழ்ந்த வங்கதேசம்.. அரையிறுதியில் இந்தியா!

இறுதியில் ஆட்டமிழக்காமல் கேப்டன் ஹர்மன்பிரித் ஹவுர் 13 ரன்களும், தீப்தி சர்மா 5 ரன்களும் எடுக்க இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
Published on

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், இந்திய மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் போட்டி ஒன்றில் இந்தியாவும் வங்கதேசமும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அவ்வணியில் ஃபெர்டஸ் 33 ரன்களும், கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் ஏமாற்றினார்.

india w
india wbcci

என்றாலும், மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா அதிரடி காட்டினார். அவர் 34 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதேபோல் பின்னர் வந்த வீராங்கனைகளான யாஷ்டிகா பாட்டியா (23 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26 ரன்கள்) எடுத்தனர். இதனால், இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் ஆட்டமிழக்காமல் கேப்டன் ஹர்மன்பிரித் ஹவுர் 13 ரன்களும், தீப்தி சர்மா 5 ரன்களும் எடுக்க இந்திய அணியின் வெற்றி உறுதியானது. 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com