இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிcricinfo

’இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல்..’ முத்தரப்பு ODI தொடரை வென்று சாதனை! 11வது சதமடித்தார் மந்தனா!

இலங்கை மண்ணில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்று இந்தியா அசத்தியுள்ளது.
Published on

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய மூன்று மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்றது.

7 போட்டிகள் அடங்கிய முத்தரப்பு தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது இந்திய அணி.

11வது சதமடித்த ஸ்மிரிதி.. தொடரை வென்றது இந்தியா!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஸ்மிரிதி மந்தனா 101 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் 116 ரன்கள் குவித்தார்.

ஸ்மிரிதி மந்தனா
ஸ்மிரிதி மந்தனா

343 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே அடித்தது. அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சினே ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா மகளிர் அணி
இந்தியா மகளிர் அணி

இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி கோப்பையை தட்டிச்சென்றது. 116 ரன்கள் அடித்த ஸ்மிரிதி மந்தனா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com