\
அக்சர் பட்டேல் - வாஷிங்டன் சுந்தர்
அக்சர் பட்டேல் - வாஷிங்டன் சுந்தர்cricinfo

ODI போட்டி| டி20 தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Published on
Summary

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-4 என தோல்வியடைந்த இந்தியா, பர்மிங்காமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அசத்தலான மீள்வெற்றி பெற்றது. 259 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரோகித், கோலி விரைவில் அவுட் ஆனாலும், சுப்மன் கில் 80 ரன்கள், பின்னர் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் அரைசதங்கள், நூறு ரன் கூட்டணியால் இந்தியா 1-0 முன்னிலை பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 0-4 என படுதோல்வியை சந்தித்த பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது இந்திய அணி.

முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

shubman gill left out ground after scoring 80 runs
shubman gill left out ground after scoring 80 runsweb

259 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 11, 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 80 ரன்கள் விளாசினார். அப்போது அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட சதமடிக்கும் வாய்ப்பை இழந்து பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய சிறிதுநேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் இருவரும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி தடுமாறியது. அப்போது கைக்கோர்த்த அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அரைசதம் விளாசியதுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

டி20 தொடரை 0-4 என தவறவிட்ட நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

அக்சர் பட்டேல் - வாஷிங்டன் சுந்தர்
IND vs ENG| 'அதிக வயதில் முதல் ODI சதம்..' இங்கிலாந்து வீரர் படைத்த விநோத சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com