\
இந்திய டி20 அணி
இந்திய டி20 அணிbcci

3வது டி20| பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியா.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Published on: 
Summary

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்றது அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணிbcci

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் அபிஷேக் சர்மா 69 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய இஷான்கிஷனும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, கடைசியாக வந்து போராடிய திலக் வர்மா, அக்சர் பட்டேல் 28, 20 ரன்கள் அடித்தனர். 10வது வீரராக களமிறங்கிய பிரின்ஸ் யாதவ் 20வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் அடித்து இந்தியாவின் ஸ்கோரை 223ஆக மாற்றினார்.

நமன் திர்
நமன் திர்bcci

224 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்ஃபார்மில் அதிரடி காட்டிய ஷாய் ஹோப்பை 5 ரன்னில் போல்டாக்கி அனுப்பினார் அர்ஷ்தீப் சிங். முதல் விக்கெட்டை எளிதாகவே இழந்தாலும் அடுத்து கைக்கோர்த்த கமில் பூரன், ஹெட்மயர் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளீப்படுத்தி 42, 43 ரன்கள் அடித்தனர். ரூதர்போர்ட், சாம்ப்சன், ஸ்பிரிஞ்செர் என அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதிரடியாக விளையாட, இறுதிவரை வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணிbcci

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய டி20 அணி
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள்.. SKY சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com