WTC Points Table
WTC Points TableX Page

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்: பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தியா!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Published on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. தென்னாப்ரிக்கா 2 ஆவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியா 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை 4 ஆவது இடத்தில் நீடிக்கிறது. இந்த 4 அணிகளுக்கு மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

WTC Points Table
WTC Points Table

அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு மீதமுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றிகள் தேவை. இதில் இந்தியாவுடன் 3 போட்டிகளும், இலங்கையுடன் 2 போட்டிகளும் அடங்கும். தென்னாப்ரிக்கா தற்போது இலங்கையுடன் விளையாடும் போட்டி உட்பட 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த போட்டி தவிர்த்து, பாகிஸ்தான் உடன் 2 போட்டிகளில் விளையாட உள்ளது.

WTC Points Table
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: 11 வது சுற்றில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி குகேஷ் வெற்றி!

இந்தியாவுக்கு மீதம் 3 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் முடிவுகளுக்காக காத்திருக்க நேரிடும்.

அதேநேரத்தில் இலங்கை தற்போது விளையாடும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்க எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள், ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் மோத உள்ளன.

WTC Points Table
Pink Ball Test | சரண்டர் ஆன இந்தியா.. ஆஸி. அபார வெற்றி. “நாங்கள் சரியாக ஆடவில்லை” - ரோகித் விரக்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com