INDVSA Test | இடம்பிடித்த சாய் சுதர்ஷன், நிதிஷ்.. முதலில் பேட் செய்யும் தென்னாப்பிரிக்கா!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கவுகாத்தியில் தொடங்க உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெறும் 30 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இந்திய அணியின் மீதும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கவுகாத்தியில் தொடங்க உள்ளது.
கழுத்து வலி காரணமாக கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கேப்டன் பொறுப்பை ரிஷப் பண்ட் ஏற்க உள்ளார். இன்றைய போட்டியில் சாய் சுதர்ஷன் மற்றும் நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து தொடரை வெல்லுமா அல்லது முந்தைய தோல்விகளுக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

