\
India Vs Afghanistan One off Test India Won of History Record
Indiax page

IND Vs AFG | ஒரே போட்டிதான்.. ஆப்கனை ஊதித் தள்ளிய IND.. வரலாற்றுச் சாதனை.. அசத்திய அறிமுக பவுலர்!

இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது.
Published on

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் அறிமுக பந்துவீச்சாளர் மானவ் சுதர் 7 விக்கெட்களை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் சதமடித்த, சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81), வாஷிங்டன் சுந்தர் (52*) ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். ஆப்கான் தரப்பில் முகமது சலீம் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

manav suthar
manav suthar

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆப்கான் அணி, தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் வேட்டை நடத்திய அறிமுக பந்துவீச்சாளர் மானவ் சுதர் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கி 6 விக்கெட்கள் வீழ்த்திய 2-ஆவது வீரர் என்ற சாதனை படைத்தார்.

அதேநேரத்தில், 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. எனினும், அதிலும் அவ்வணிக்கு வேதனையே மிஞ்சியது. அவ்வணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் தொடரையும் வென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸையும் சேர்த்து மானவ் சுதர் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

india
india

இந்த வெற்றி. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாச அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2018-இல் இதே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூருவில் பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வெற்றியே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆனால், அதே ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் & 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

India Vs Afghanistan One off Test India Won of History Record
5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் பவுலர்.. 500 ரன்கள் குவித்த இந்தியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com