டி20 உலகக்கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ind vs zim
ind vs zimpt web

ஜூலை 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த ஒருவாரத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது. இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் Tavengwa Mukuhlani பேசிய போது, “இந்தத் தொடரை நடத்துவது மூலம் தங்களுக்கு நன்மை கிடைக்கும். சர்வதேச அளவில் ஜிம்பாப்வே திரும்பி பார்க்கப்படும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “ஜிம்பாப்வே வாரியத்திற்கு பிசிசிஐ ஆதரவு தேவை. அந்த நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு இத்தொடர் உதவி புரியும் என்று நம்புகிறேன்” கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com