\
India to host inaugural Womens Champions Trophy  in 2027
Harmanpreet Kaur, jay shahPTI

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

2027-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published on

ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி 4 உலகளாவிய கோப்பை தொடர்களை நடத்திவருகிறது. அதேபோன்று, மகளிர் தொடர்களையும் விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இத்தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. முன்னதாக, இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இத்தொடர், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Harmanpreet Kaur, jay shah
Harmanpreet Kaur, jay shahPTI

மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் டி20 வடிவில் விளையாடப்படும். லீக் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இப்போட்டிகள், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கி 28 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆறு அணிகள் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் வதோதராவில் உள்ள வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

India to host inaugural Womens Champions Trophy  in 2027
ODI போட்டி | 40 ஓவர்களாக குறைக்க ஐசிசி திட்டம்? ஆலோசனை கூறும் ஷுப்மன் கில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com