இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துcricinfo

காற்றில் பறந்து சென்ற ஸ்டம்ப்.. ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் OUT! ஒரே நம்பிக்கை ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா
இங்கிலாந்து - இந்தியா

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

காற்றில் பறந்து சென்ற ரிஷப் பண்ட்டின் ஆஃப் ஸ்டம்ப்!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 387 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களே சேர்த்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74 மற்றும் ஜடேஜா 72 ரன்களும் அடித்து அசத்தினர்.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சுழற்பந்துவீச்சால் 192 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், ஜேமி ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் முதலிய 3 தரமான வீரர்களின் ஸ்டம்புகளை தகர்த்த வாஷிங்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

193 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணிக்கு இங்கிலாந்து பவுலர்கள் சர்ப்ரைஸ் கொடுத்தனர். 4வது நாள் ஆட்டத்தின் முடிவிலேயே இந்தியா 58 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

இந்நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்தியா வெற்றிபெற 135 ரன்களும், இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவையாக இருந்தது. களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் ஒரு அற்புதமான டெலிவரி மூலம் ரிஷப் பண்ட்டின் ஆஃப் ஸ்டம்பை ஆர்ச்சர் தகர்க்க, கேஎல் ராகுலை எல்பிடபள்யூ மூலம் வெளியேற்றிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அசத்தினார்.

அதற்குபிறகு வந்த வாஷிங்டனும் 0 ரன்னுக்கு வெளியேற, இந்தியா வெற்றிபெற கடைசி நம்பிக்கையாக அனுபவம் நிறைந்த ஜடேஜா மட்டுமே இருக்கிறார். அவருக்கு துணையாக நிதிஷ் குமார் ரெட்டி உள்ள நிலையில் இருவரும் அணியை மீட்டு எடுத்துவருவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com