india - south africa
india - south africacricinfo

58/5.. ஒரே ஓவரில் 2 விக்கெட் காலி.. 100 ரன்னையாவது கடக்குமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி..
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்கா

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்கமுடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் நோக்கத்தில் விளையாடிவருகிறது..

இந்தியா தொடர்ந்து தடுமாற்றம்..

குவஹாத்தியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, சேனுரான் முத்துசாமியின் 109 ரன்கள் மற்றும் மார்கோ யான்சனின் 93 ரன்கள் ஆட்டத்தால் 489 ரன்கள் குவித்தது..

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 201 ரன்களுக்கு சுருண்டது.. 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 260/5 ரன்கள் அடித்து டிக்ளார் செய்தது..

sai sudharsan
sai sudharsan

549 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டமுடிவில் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இரண்டு பேரின் விக்கெட்டையும் இழந்து 27/2 என முடித்தது..

இந்தநிலையில் கடைசி நாளான இன்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சைமன் ஹார்மர் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.. குல்தீப் யாதவ் 5 ரன்னிலும், துருவ் ஜூரெல 2 ரன்னிலும் வெளியேறினர்..

களத்தில் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் பேட்டிங் செய்துவந்த நிலையில், ஹார்மர் வீசிய பந்தில் 13 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.. இதன்மூலம் 58 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராடிவருகிறது இந்திய அணி..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com