இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் வருமா..? அரையிறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை மோதல்!
2026 ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. யுஏஇ-க்கு எதிராக இரட்டை சதமடித்த சூர்யவன்ஷி, இன்றைய போட்டியிலும் அதே சாதனையை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பது ரசிகர்களின் கவனமாக உள்ளது.
2026 வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவருகிறது. இதில் ஆசியாவை சேர்ந்த 8 அணிகள் விளையாடிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முதலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
அனைத்து போட்டிகளிலும் வென்று இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வலுவாக இருக்கின்றன. இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும் யுஏஇ-க்கு எதிரான வெற்றிக்கு பிறகு பலமாக காணப்படுகிறது. அதிலும் யுஏஇ-க்கு எதிராக சூர்யவன்ஷி 52 பந்தில் இரட்டை சதமடித்து உலகசாதனை படைத்தது கிரிக்கெட் உலகையே மிரளவைத்துள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் இந்தியா வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கடந்தப்போட்டியில் 28 சிக்சர்களுடன் 204 ரன்கள் அடித்த சூர்யவன்ஷி, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அதையே செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

