சொதப்பிய இந்தியா.. மைதானத்தில் நிலவிய அமைதி; சொன்னதை செய்து காட்டிய கம்மின்ஸ்! 241 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
விராட் கோலி
விராட் கோலிட்விட்டர்

2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டுமுறை சாம்பியனான இந்தியாவும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இவ்விரு அணிகளும், இன்று (நவ. 19) குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையும் படிக்க: Ind Vs Aus WC Final: "இறுதிப்போட்டியை காண பிசிசிஐ எனக்கு அழைப்பு விடுக்கவில்லை" - கபில் தேவ் விரக்தி

இதையடுத்து இந்திய அணியில் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இளம் நட்சத்திரம் சுப்மன் கில்லும் களமிறங்கினர். இறுதிப்போட்டியை முன்னிட்டு, இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடும் என எதிர்பார்த்த வேளையில், சுப்மன் கில் 4 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித்துடன் இணைந்தார், நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்த இணை ஓரளவு நிலைத்து நின்று ஆடியது.

எனினும், ரோகித் வழக்கம்போலவே அதிரடி காட்டினார். அவருடைய அதிரடியில் 3 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் வந்து 47 ரன்கள் எடுத்திருந்தபோது மேக்ஸ்வெல் பந்தில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹெட்ஸ் பின்புறம் திரும்பியவாறு ஓடியே அற்புதமாக அந்த கேட்சை பிடித்தார். அது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

எனினும் ரோகித், நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3 அரைசதம், 1 சதத்துடன் 597 ரன்கள் குவித்துள்ளார். மேலும் தொடரில் சிக்ஸர் (31) அதிகம் அடித்த வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்: சுரங்கத்தில் 7 நாட்களாக சிக்கிதவிக்கும் 41 தொழிலாளர்களின் நிலைஎன்ன? கவலையில் உறவினர்கள்

அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் விராட்டுடன் இணைந்த கே.எல்.ராகுல், அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இருவரும் மேலும் விக்கெட்களை இழக்காது நீடித்ததால், அதிக பந்துகளைச் சந்தித்து அரைசதம் அடித்தனர். பின்னர் விராட் கோலி 54 ரன்களிலும், அவருக்குப் பின் களமிறங்கிய ஜடேஜா 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். தொடர்ந்து வந்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும், முகம்மது ஷமி 3 ரன்களிலும், பும்ரா 1 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் இந்திய அணி 250 ரன்கள்கூடக் குவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. முக்கியமாக, இன்றைய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ரன் குவிக்க திணறியது. இதையடுத்து, இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக, மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்க உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே பெரிதாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் நேற்று பேட்டியில் கூறியிருந்தார். இன்றைய இன்னிங்ஸில் விராட் கோலி ஆட்டமிழந்தது மைதானத்தில் மயான அமைதி நிலவியது.

இதையும் படிக்க: ”இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது” - கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com