6,6,6,6..ஆஸியை சிக்ஸர்களால் களங்கடித்த சூர்யகுமார்! சதமடித்த ஸ்ரேயாஸ்,கில்; இந்தியா 399 ரன் குவிப்பு

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிகபட்ச ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.
Suryakumar Yadav
Suryakumar YadavTwitter

மத்தியபிரதேசத்தில் இந்தூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

சிறப்பான பார்ட்னர் ஷிப் - அடுத்தடுத்து சதம் அடித்த ஸ்ரேயாஸ் - சுப்மன் கில்

தொடக்க முதலே இருவரும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். கிட்டத்தட்ட இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ரன்களை குவித்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் முதல் 10 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களிலும் 79 எடுக்க 20 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை கடந்தது. இந்த ஜோடி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணி 28.3 ஓவர்களில் 200 ரன்களை எட்டிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதம் விளாசினார். இருப்பினும் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத் தொடரும் சுப்மன் கில்லும் 92 பந்துகளில் சதம் விளாசினார். இவரும் சதம் விளாசிய கையோடு நடையைக் கட்டினார். சுப்மன் கில் 97 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அரைசதம் விளாசிய கேப்டன் கே.எல்.ராகுல்

40.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும் வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

KL Rahul
KL Rahul

இஷான் கிஷனும் முதல் பந்திலே சிக்ஸர் விளாசினார். அதனால், இந்திய அணி 350 ரன்களை எளிதில் கடப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இஷான் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல்.ராகுலும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிக்ஸர் மழை பொழிந்த சூர்ய குமார்!

சூர்யகுமார் டி20 போட்டிகளில் மட்டும்தான் சிறப்பாக விளையாடு, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கமாட்டார் என்பதை இன்றைய போட்டியில் அடித்து நொறுக்கினார். வந்த உடன் சில பந்துகளை மட்டும் தடுத்தாடிய அவர், பின்னர் ருத்ர தாண்டவம் ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் க்ரீன் ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அவர் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

399 ரன் குவித்த இந்திய அணி

சிறப்பாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 7 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 6 சிக்ஸர், 6 பவுண்டர்கள் விளாசி தள்ளினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com