\
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாbcci

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்.. 223 ரன்கள் அடித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 223 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி.
Published on: 
Summary

இந்தூரில் நடந்த 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம் மற்றும் திலக் வர்மா, அக்சர் பட்டேல், பிரின்ஸ் யாதவின் பங்களிப்பால் இந்தியா 223 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீசுக்கு சவால் விட்டது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்றது அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் அபிஷேக் சர்மா 69 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய இஷான்கிஷனும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்தியா 15 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்திருந்தது.

கடைசியாக வந்து போராடிய திலக் வர்மா, அக்சர் பட்டேல் 28, 20 ரன்கள் அடிக்க. 10வது வீரராக களமிறங்கிய பிரின்ஸ் யாதவ் 20வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் அடித்து இந்தியாவின் ஸ்கோரை 223ஆக மாற்றினார்.

கடந்த போட்டியில் 249 ரன்கள் அடித்தபோதும் இந்தியா தோற்ற நிலையில், இந்தப்போட்டியிலாவது வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அபிஷேக் சர்மா
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள்.. SKY சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com