IND vs ZIM டி20| 81 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷி.. 192 ரன்கள் குவித்த இந்தியா!
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் தோல்வியடைந்த பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மீண்டு எழுந்த இந்தியா, ஹராரேவில் நடந்த 3வது டி20யில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, ஜிம்பாப்வேக்கு எதிராக மீண்டும் அரைசதம் பதிவு செய்து, டி20 வடிவில் தனக்கென வரலாற்று சாதனையைப் படைத்தார்.
அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலிரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தொடர்ந்து 2 தொடரில் தோல்வியை தழுவியிருந்த இந்திய அணி, முதல் தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்த, 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

