”SKY-க்கு பினிசிங் ரோல்; மிடில் ஆர்டரில் ருதுராஜ்” - இந்தியாவின் திட்டம் என்ன? தொடரும் சோதனை முயற்சி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறவில்லை.
IND vs WI
IND vs WITwitter

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ODI போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Hardik Pandya
Hardik Pandya

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டது. மூத்த வீரர்கள் இருவரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியால் வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஓப்பனர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்த போதும் இந்திய அணியால் பெரிய ரன்களை ஸ்கோர் போர்டில் சேர்க்க முடியவில்லை. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

Hardik Pandya
Hardik Pandyatwitter

போட்டிக்கு முன்னதாக ரோகித் மற்றும் கோலி அணியில் இல்லாதது குறித்து பேசியிருந்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “மூத்த வீரர்கள் இருவருக்கும் ஓய்வளித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அணியில் இருக்கும் சில கேள்விகளுக்கு பதிலை தேட முயற்சிக்கிறோம்” என்று பதிலளித்திருந்தார். இந்திய அணியின் சோதனை முயற்சி முதல் போட்டியில் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் மூத்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

பினிசிங் ரோலில் சூர்யகுமாரை இறக்க திட்டமிடும் இந்திய அணி!

எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு, சிறந்த அணியை எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு சோதனை முயற்சியில் செயல்பட்டு வருகிறது இந்தியா. அதன்படி பேக்கப் ஓபனராக இஷான் கிஷான், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், 6-வது இடத்தில் பினிசர் ரோலில் சூர்யகுமார், 4வது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் மிடில் ஆர்டர் வரிசைக்கு பேக்கப் வீரராக ருதுராஜ் ஹெய்க்வாட் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் இஷான் கிஷன் மட்டுமே ரன்களை அடித்து வருகிறார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் இருந்து வருவது இந்திய அணியின் சோதனை முயற்சியை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Suryakumar
Suryakumar

மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் இல்லாதது பெரிய பாதகமாக இருந்துவரும் நிலையில், அதற்கான மாற்றுவீரர்கள் சிறப்பாக செயல்படாதது கவலையாகவே இருந்துவருகிறது. மிடில் ஆர்டரை ஸ்டிராங்காக மாற்ற ஹர்திக் பாண்டியாவை 4-வது இடத்திலும், பினிசிங் ரோலில் சூர்யகுமார் யாதவையும் பயன்படுத்த இந்திய அணி திட்டமிட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் பினிசிங் ரோலில் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணியை இந்த முயற்சியை மேற்கொள்ள வைத்துள்ளது. தற்போது முதல்தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் ஹெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை மூத்த பந்துவீச்சாளரான உனாத்கட்டுக்கும், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3-வது போட்டிக்கான இந்திய அணி : இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிவரும் இந்திய அணியில், அதிரடியான பேட்டிங் செய்த இஷான்கிஷன் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கெய்ட்வாட் 8 ரன்னில் சொதப்பினார். 31 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்த இந்திய அணி 221 ரன்களுடன் விளையாடி வருகிறது. தொடக்க வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்து ஆடிவருகிறார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த சுஞ்சு சாம்சன் (51) அரைசதம் அடித்த கையோடு விக்கெட்டை பறிகொடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com