IND vs UAE| 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணி.. முதலில் பந்துவீச்சு தேர்வு!
பயிற்சியாளரான2025 ஆசிய கோப்பை தொடரானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இன்று யுஏஇ அணிக்கு எதிரான முதல் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்தியா..
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் மொத்த மெயின் பிளேயர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் இதே ஆசியக்கோப்பை அணிதான் டி20 உலக கோப்பைக்கும் தயாராகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஆல்ரவுண்டர்களை குறிவைக்கும் தலைமை பயிற்சியாளரான கம்பீர், சஞ்சு சாம்சனை களமிறக்குவாரா என்ற கேள்வி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்பொருள் அவர் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி முதலிய 3 ஸ்பின்னர்களும், ஒரே வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ராவும் களமிறங்கியுள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே நீடிக்கின்றனர்.
இந்திய பிளேயிங் அணி:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி