இந்திய அணி - இலங்கை அணி
இந்திய அணி - இலங்கை அணிFacebook

27 ஆண்டுகள் சாதனையை நழுவவிட்ட இந்திய அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கைப்பற்றியுள்ளது.
Published on

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கைப்பற்றியுள்ளது. கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகள் இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.

50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 248 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகளவாக அவிஷ்கா 96 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து 249 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்திய அணி - இலங்கை அணி
”இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. ”- ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

26.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்களுக்கு சுருண்டது. 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்தியா, ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்து 27 ஆண்டுகள் சாதனையை நழுவவிட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com