\
nz team
nz teamreuters

INDVsNZ : இந்தியாவுக்கு ஜாக்பாட்.. காயத்தால் விலகிய 3 நியூசிலாந்து நட்சத்திரங்கள்!

ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் மூன்று முக்கிய வீரர்கள் விலகியிருப்பது அவ்வணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளபோதும், இந்தியாவுக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.
Published on: 

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றிய நிலையில் அடுத்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில், இத்தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியைச் சேர்ந்த 3 முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அவ்வணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொடை தசைப் பிடிப்பு காரணமாக மார்க் சாப்மேன் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். அதேபோல், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரச்சின் ரவீந்திராவும் ஒருநாள் தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்குப் பதிலாக, டிம் சீஃபெர்ட் , ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பயிற்சி ஆட்டத்தின்போது டெவான் கான்வே சக வீரரான மேட் ஹென்றியுடன் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டதால், நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மட்டும் இவர் விலகியுள்ளார்.

mitchell santner
mitchell santnerreuters

இதுதொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர். மேட் ஹென்றிக்கு Concussion test செய்யப்பட்டு அவர் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கான்வே தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையில் உள்ளார். தலைப்பகுதியில் ஏற்படும் காயங்களை மிகவும் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். ஒருவேளை கான்வே விளையாட முடியாமல் போனால் அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பர்-பேட்டர் டிம் செய்ஃபெர்ட் களமிறக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளார். மூன்று முக்கிய வீரர்கள் விலகியிருப்பது அவ்வணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளபோதும், இந்தியாவுக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.