IND vs AUS டி20| தனியொரு ஆளாக போராடிய அபிஷேக் சர்மா.. 125 ரன்னுக்கு சுருண்ட இந்தியா!
மெல்போர்னில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்து தனியொரு ஆளாக போராடினார். ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என இழந்தபிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது இந்திய அணி..
கான்பெராவில் தொடங்கப்பட்ட முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசல்வுட், சுப்மன் கில் 5, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1, திலக் வர்மா 0 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாக்கி அசத்தினார்.
ஹசல்வுட்டின் அபாரமான பந்துவீச்சால் 49 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா..ஒருபுறம் விக்கெட்டுகளாக சரிந்தாலும் மறுமுனையில் 68 ரன்கள் அடித்து அசத்திய அபிஷேக் சர்மா இந்தியாவை 125 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.. அபிஷேக் சர்மாவிற்கு சப்போர்ட்டாக பேட்டிங் செய்த ஹர்சித் ராணா 33 ரன்கள் அடித்தார்..
126 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யவிருக்கிறது..


