266 ரன் இலக்கு: ’டக்’ அவுட்டான கேப்டன் ரோகித்! 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி! மிரட்டும் வங்கதேசம்

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதிவருகின்றன.
Rohit Sharma
Rohit SharmaTwitter

கடந்த ஆகஸ்ட் 30தேதி முதல் நடந்துவரும் 2023 ஆசியக்கோப்பை தொடர் அதன் கடைசி லீக் போட்டியை எட்டியுள்ளது. கோப்பையை உறுதி செய்யும் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் ஞாயிறு கிழமை கொழும்புவில் நடைபெறவிருக்கிறது.

Shardul
Shardul

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணியில் பல முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஸ்குவாடில் இருந்த மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு முதல் போட்டிக்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ், பரிசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி முதலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் முதலிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் ஷாகிப்!

டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கத்திலேயே அதிச்சிகொடுத்தார் முகமது ஷமி. விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸை ஷமி போல்டாக்கி வெளியேற்ற, தன்னுடைய பங்கிற்கு அறிமுக வீரர் ஹாசனை போல்டாக்கி அனுப்பி வைத்தார் ஷர்துல் தாக்கூர். அடுத்துவந்த அனமுல்லை 4 ரன்னில் ஷர்துல் வெளியேற்ற, மெஹிதி ஹாசனை 13 ரன்னில் வெளியேற்றி இந்த தொடரில் தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றினார் அக்சர் பட்டேல். 59 ரன்களிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி தடுமாறியது.

Shakib Al Hasan
Shakib Al Hasan

பின்னர் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் டோவ்ஹிட் ஹ்ரிடோய் (Towhid Hridoy ) இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து அரைசதம் போட்ட இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியை 80 ரன்களில் ஷாகிப் அல் ஹசனை வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் ஷர்துல் தாக்கூர். அடுத்துவந்த மிடில் ஆர்டர் வீரர்கள் ஷாகிப் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர். நசும் அஹ்மது 44 ரன்கள், மெஹிதி ஹாசன் 29 ரன்கள், தன்ஷிம் 14 ரன்கள் என இறுதியில் ரன்கள் சேர்க்க 50 ஓவர் முடிவில் வங்கதேசம் 265 ரன்கள் சேர்த்தது.

0 ரன்னில் வெளியேறிய கேப்டன்! தடுமாறும் இந்திய அணி!

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான கொழும்புவில் 265 ரன்கள் என நல்ல டோட்டலை எட்டியிருக்கும் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா எப்படி விளையாடப்போகிறது என்று எதிர்ப்பார்த்த நிலையில், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோகித்தை டக் அவுட்டில் வெளியேற்றினார் தன்ஷிம். அடுத்துவந்த திலக் வர்மாவையும் களத்தில் நிற்க விடாமல் போல்ட்டாக்கி அனுப்பி வைத்தார் தன்ஷிம். 17 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாறி வருகிறது.

Tanzim
Tanzim

17.1 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்களோடு ஆடிவருகிறது. திலக் வர்மா 5, கே.எல்.ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 40 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com