\
ICC Womens T20 WorldCup 2026 stars from today
t20 WC Teams 2026x page

T20 W WC | இன்று தொடக்கம்.. 12 அணிகள் பங்கேற்பு.. முதல் போட்டியில் ENG - SL மோதல்!

24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
Published on

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, வரும் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

2009-ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 12) இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும். அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்தத் தொடரில் இந்திய அணி வருகிற 14-ஆம் தேதி பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அடுத்து 17ஆம் தேதி நெதர்லாந்துடனும், 21ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும், 25ஆம் தேதி வங்கதேசத்தையும், 28ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 84 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 22½ கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 11 ¼ கோடியும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியை தழுவும் அணிகளுக்கு தலா ரூ. 6½ கோடியும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 9 உலகக் கோப்பை மகளிர் டி.20 தொடரிலும் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா 6 முறை பட்டம் வென்றுள்ளது.

இங்கிலாந்து( 2009) நியூசிலாந்து (2024), வெஸ்ட் இண்டீஸ் (2016) தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. இந்தியா ஒருமுறைகூட பட்டம் வென்றதில்லை. 2020இல் பைனலில் ஆடி தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்தியா, இந்த முறை டி.20 கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com