7வது ODI சதம் விளாசினார் ஹர்மன்பிரீத் கவுர்
7வது ODI சதம் விளாசினார் ஹர்மன்பிரீத் கவுர்cricinfo

IND vs ENG | 7வது ODI சதம் விளாசினார் ஹர்மன்பிரீத் கவுர்.. 318 ரன்கள் குவித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுற்ற நிலையில், 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா டி20 தொடரை வெல்வது இதுவே முதல்முறை.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி

அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கிய நிலையில், இந்தியா முதல் போட்டியிலும் இங்கிலாந்து இரண்டாவது போட்டியிலும் வென்று தொடர் 1-1 என சமனில் நீடித்துவருகிறது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது.

7வது ஒருநாள் சதமடித்தா ஹர்மன்பிரீத் கவுர்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 318 ரன்கள் குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 பவுண்டரிகள் அடித்து 82 பந்தில் சதமடித்து அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய 7வது சதமாகும்.

ஹர்மன்பிரீத் கவுர்
ஹர்மன்பிரீத் கவுர்

319 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் இங்கிலாந்து அணி, 31 ஓவர் முடிவில் 171/3 என விளையாடிவருகிறது. இன்னும் 19 ஓவர்களில் 148 ரன்கள் எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com