வெளுத்து வாங்கிய பிரண்டன் - பூரான்; 17 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்திய அணி!

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது அசத்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
WI - IND
WI - INDTwitter

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனவும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

Wi - Ind
Wi - Ind

ரோவ்மன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மெயர் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றனர். டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இழந்தாலும் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய விண்டீஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது. இரண்டு போட்டிகளிலும் நிக்கோலஸ் பூரன் 41, 67 என 140க்கு மேலான ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டிவிட்டார்.

கம்பேக் கொடுத்து 2-2 என தொடரை சமநிலைக்கு எடுத்துவந்த இந்தியா!

பின்னர் 3வது மற்றும் 4வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய இளம் வீரர்கள், தொடரை 2-2 என்ற சமநிலைக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் டிசைடர் மற்றும் கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3வது போட்டியில் சிறப்பாக பந்துவீசிய விண்டீஸ் வீரர்கள், இந்திய அணியை பார் ஸ்கோரை எட்டவிடாமல் தடுத்து நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவை 27 ரன்னில் வெளியேற்றிய விண்டீஸ், சூர்யகுமார் 61 ரன்கள் அடித்து இறுதிவரை போராடினாலும் மற்றவீரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றி ஏமாற்றினர். முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் 165 ரன்களை மட்டுமே எட்டமுடிந்தது.

Brandon King
Brandon King

பின்னர் 166 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு டி20 போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய இளம்வீரர்களுக்கு எடுத்துக்காட்டி கொண்டிருந்தார் பூரன். 1 பவுண்டரி, 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் 47 ரன்கள் எடுக்க, மறுபுறம் பொறுமையாக இன்னிங்ஸை கட்டமைத்த பிரண்டன் கிங் அதிரடிக்கு திரும்பினார்.

WI
WI

5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என அபாரமாக ஆடிய அவர் 85 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறாமல் இருந்த வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முதல்முறையாக வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com