”ரோகித், கோலிக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்; அது ஹர்திக் கைகளில் தான் இருக்கிறது” - சோயிப் அக்தர்

”ரோகித் மற்றும் கோலிக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ரோகித், விராட், அக்தர்
ரோகித், விராட், அக்தர்ட்விட்டர்

நடப்பு உலகக்கோப்பை மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதே, இன்றளவும் அனைவரின் பேச்சாக இருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் தோல்வி, அரசியல்ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அடுத்த உலகக்கோப்பை வரை அவர்கள் விளையாடுவார்களா என்பதே முதல் கேள்வியாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் முழுவதும் இளம்படைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியாட்விட்டர்

மேலும் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு, வீரர்களைத் தேர்வுசெய்யும் பணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டி20 கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாக, உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். ஆகையால், காயத்திற்குப் பிறகு டி20 உலகக்கோப்பையில் அவரே கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்தச் சூழலில்தான் ரோகித் மற்றும் கோலியின் எதிர்காலம் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: இந்தியா சாதித்த ’காபா’ மைதானம்.. இடிக்கப்போகும் ஆஸி.. வரலாறும், சர்ச்சையும்!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ”ரோஹித்தைவிட சிறந்த தொடக்க ஆட்டக்காரர் இந்தியாவில் இல்லை. அவருக்கும் கோலிக்கும் இன்னும் கிரிக்கெட் விளையாட வேண்டிய காலம் இருக்கிறது. எனினும், இந்தியா ஒருகட்டத்திற்கு மேல் அவர்களை விடுவிக்க முடிவெடுத்தால், ரோஹித்தையும் விராட்டையும் மரியாதையுடன் வெளியேற்றுவது ஹர்திக்கின் பொறுப்பு. தோனி வந்ததும் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை கொடுத்தார். விராட் வந்ததும் தோனிக்கு மரியாதை கொடுத்தார்.

விராட்டுக்கு பதிலாக ரோஹித் வந்தபோது அவருக்கும் மரியாதை கொடுத்தார். எனவே இந்த இரண்டு சிறந்த வீரர்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது ஹர்திக் பாண்டியாவின் கையில் உள்ளது. இனிமேல் கால்பதிக்க வேண்டியது அவர் கையில்தான் உள்ளது. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்கள் இந்த மரியாதைக்கு தகுதியானவர்கள். இதன்மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு அழுத்தம் வரலாம். எனினும் அந்த மரியாதையை ரோஹித்துக்கும் கோலிக்கும் ஹர்திக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள், எனவே அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: WC பைனலில் சொதப்பல்.. இன்று முதல்வீரராக மைல்கல் சாதனை! டி20-யில் சூர்யகுமாரின் மாஸ்டர் க்ளாஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com