“வீரர்களின் மனைவிகள் உடன் இருப்பதால், இந்திய அணி தோற்கவில்லை” - ஹர்பஜன் சிங்
வீரர்களின் மனைவிகள் உடன் இருப்பதால், இந்திய அணி தோற்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், தற்போது வெளியாகியுள்ள பத்தில் 9 கட்டுப்பாடுகள், தான் விளையாடிய காலத்திலிருந்தே அமலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இடையில் அதனை மாற்றியது யார் எனவும், எப்போது மாற்றப்பட்டது என விசாரிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் தற்போது வெளியானது, இந்திய அணியின் தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதாகவும் கூறியுள்ள ஹர்பஜன் சிங், மனைவிகள் வீரர்களுடன் இருந்ததாலோ, ஒருவர் தனியாக பயணித்ததாலோ, நாம் தோற்கவில்லை தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மோசமாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என்ற அவர், அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.