\
dube - washington - gambhir
dube - washington - gambhirweb

”துபே, வாஷிங்டன் எல்லாம் எதற்கு அணியில்..?” கம்பீர் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!

பந்துவீசவும் முடியாமல், பேட்டிங் செய்யவும் முடியாமல் எதற்கு சில வீரர்கள் அணியில் இருக்கின்றனர் என தெரியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் கம்பீர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை வென்றவுடன் இந்திய டி20 அணி முழுமையாக மாற்றப்பட்டதில், சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக டி20யில் இல்லாத ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது தலைமையில் அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் ஒயிட்வாஷ் அடைந்த இந்தியா, ஐசிசி தரவரிசையில் சரிவை சந்தித்தது. இதன் பின்னணியில், கௌதம் கம்பீர் தனது விருப்ப வீரர்களுக்கு பாரபட்சமாக வாய்ப்பு அளிப்பதாக ஹனுமா விஹாரி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு இந்திய டி20 அணி முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் டி20 அணியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக 3 ஆண்டுகளாக டி20 வடிவத்திலேயே இல்லாத ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தசூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராகவும் 0-4 என ஒயிட்வாத் ஆனது. இந்த படுதோல்வியால் 3 ஆண்டுகளாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா சரிவை சந்தித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தந்தை வேதனை
ஸ்ரேயாஸ் ஐயர்web

தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பை வென்ற ஒரே அணியாக உலக சாம்பியனான வலம்வந்த இந்தியா, இப்படியான முறையில் மோசமாக தோற்றது பல்வேறு விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்தவகையில் கவுதம் கம்பீர் அணியில் இருக்கும் பல வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தனக்கு விருப்பமான வீரர்கள் என்பதால் வாய்ப்பு வழங்குவதாக முன்னாள் இந்திய வீரர் ஹனுமா விஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

dube - washington - gambhir
500 குழந்தைகளுக்கு சூட்டப்பட்ட ’எர்லிங் ஹாலண்ட்’ பெயர்.. நாடு கடந்து விரும்பப்படும் நார்வே வீரர்!

கம்பீரை குற்றஞ்சாட்டியுள்ள ஹனுமா விஹாரி, “கௌதம் காம்பீருக்கு சில விருப்பமான வீரர்கள் உள்ளனர், அவர்களை எடுத்து விளையாட வைக்க அவர் விரும்புகிறார். அவர்களை எல்லாம் அணியில் சேர்ப்பதில் என்ன மதிப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அணியில் சில வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. துபேவிற்கு பந்துவீசத் தெரியாது, ஃபீல்டிங்கிலும் சரியாக செயல்படத் தெரியாது, பேட்டிங்கிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை. புதிதாக எடுக்கப்பட்ட ஷெட்ஜும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஏன் இன்னும் அணியில் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக அவரது பங்களிப்புகளைப் பார்த்தால், அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை” என்று கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

gambhir - agarkar
gambhir - agarkar

மேலும் அணித் தேர்வில் தவறு இருப்பதாக கூறிய அவர், “வருண் சக்கரவர்த்தி அல்லது அக்சர் படேல் என யாராக இருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் பிரச்சினை. இந்தத் தொடருக்கு ரவி பிஷ்னோய் ஏன் அழைத்து வரப்பட்டார்?. அணித் தேர்வு மற்றும் ஆடும் லெவன் தேர்வில்தான் பிரச்சினை உள்ளது” என பேசியுள்ளார்.

dube - washington - gambhir
முதல் ODI| 12 ஆண்டுகளாக தோற்காத இங்கிலாந்து.. சம்பவம் செய்யுமா இந்தியா? பேட்டிங் தேர்வு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com