2026 wpl eliminator
2026 wpl eliminatorcricinfo

WPL எலிமினேட்டர் போட்டி| டெல்லிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

2026 WPL தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி.
Published on
Summary

WPL 2026 எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் 168 ரன்கள் குவித்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஜியார்ஜியா மற்றும் பெத் மூனி இணைந்து அணியை மீட்டனர். டெல்லி அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா அல்லது குஜராத் அணி முதல்முறையாக முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 4வது WPL கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.

2026 WPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது ஆர்சிபி
2026 WPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது ஆர்சிபிcricinfo

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லவிருக்கும் 2வது அணி யார் என்ற கேள்விக்கு விடை தரும் எலிமினேட்டர் போட்டி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றுவருகிறது.

2026 wpl eliminator
U19 WC செமி-ஃபைனல்| உயிரை கொடுத்து போராடிய ஆஸி கேப்டன்.. FINAL சென்றது இங்கிலாந்து!

168 ரன்கள் குவித்த குஜராத்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 59 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பெத் மூனி
பெத் மூனி

ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜியார்ஜியா மற்றும் பெத் மூனி இருவரும் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். 25 பந்தில் 35 ரன்கள் அடித்து ஜியார்ஜியா வெளியேறினாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பெத் மூனி 62 ரன்கள் அடித்து அணியை 168 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்

4வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால் டெல்லி அணி 169 ரன்கள் இலக்கை எட்டவேண்டும். தொடர்ந்து 4வது முறையாக டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா அல்லது முதல்முறையாக குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2026 wpl eliminator
WPL 2026| ’2வது கோப்பை லோடிங்..’ முதல் அணியாக ஃபைனல் சென்றது ஆர்சிபி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com