\
rcb vs gt
rcb vs gtcricinfo

IPL FINAL | புவனேஷ், ஹசல்வுட், சலாம் 7 விக்கெட்டுகள்.. 155 ரன்கள் மட்டுமே அடித்த குஜராத்!

2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக 155 ரன்கள் மட்டுமே அடித்தது குஜராத் டைட்டன்ஸ்.
Published on
Summary

2026 ஐபிஎல் கோப்பையை நோக்கி ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இறுதியில், டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கில், சுதர்சன், நிஷாந்த் சிந்து, பட்லர் ஆகியோர் தோல்வியடைந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார். புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹசல்வுட் தலா 2 விக்கெட்டும், சலாம் 3 விக்கெட்டும் எடுத்து ஆர்சிபிக்கு முன்னிலை அமைத்தனர்.

2026 ஐபிஎல் கோப்பையை வென்று மகுடம் சூடப்போவது யார் என்ற கேள்விக்கான விடை இன்னும் சிறிதுநேரத்தில் தெரிந்துவிடும். நடப்பு சீசன் முழுவதும் அபாரமாக விளையாடிய நடப்பு சாம்பியன் ஆர்சிபியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

ஆர்சிபி 2026
ஆர்சிபி 2026

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி விரைவாகவே கில்லை 10 ரன்னிலும், சுதர்சனை 12 ரன்னிலும் வெளியேற்றி அசத்தியது.

அடுத்தடுத்து வந்த நிஷாந்த் சிந்து, பட்லர் அனைவரும் பெரிய ரன்களை அடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதிவரை களத்தில் நின்ற வாஷிங்டன் சுந்தர் 37 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்த டைட்டன்ஸ் அணி வெறும் 155 ரன்கள் மட்டுமே அடித்தது.

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும், ரசிக்தர் சலாம் 3 விக்கெட்டுகளும் என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 156 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் ஆர்சிபி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்துள்ளது.

rcb vs gt
IPL FINAL| கில், சுதர்சன் அடுத்தடுத்து OUT.. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com