\
GT bus got fire
GT bus got fireweb

IPL| இறுதிப்போட்டிக்கு பின் GT வீரர்கள் பயணித்த பேருந்து தீ விபத்து.. உயிர் தப்பிய வீரர்கள்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பிய குஜராத் வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ பிடித்ததால் வீரர்கள் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தது. அதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்து தங்கும் இடத்துக்கு சென்ற வீரர்கள் பயணித்த பேருந்தில் திடீரென தீப்பற்றி புகை எழுந்தது. ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என கூறப்பட்ட இந்த விபத்தில், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

2026 ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய போதும் ஆர்சிபி அணியை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அதிகமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாக ஜொலித்துவரும் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய தோல்விக்கு பிறகு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது.

இந்தசூழலில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலிருந்து தங்கும் அறைக்கு தங்களுடைய பிரத்யேக பேருந்தில் குஜராத் வீரர்கள் பயணம் செய்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற பேருந்தில் திடீரென தீப்பற்றி புகைப்பிடித்ததால் வீரர்கள் எந்தவித ஆபத்துமின்றி கீழிறக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கிட்டத்தட்ட மாற்று பேருந்திற்காக 1 மணி நேரம் சாலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தவிபத்திற்கு ஷார்ட் சர்கியூட்டால் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என சொல்லப்படுகிறது. பின்னர் மாற்று பேருந்து தயார்செய்யப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

GT bus got fire
கோலி வின்னிங் SIX.. 2வது கோப்பை வென்றது RCB! தோனி, ரோகித் சாதனையை உடைத்த பட்டிதார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com