“பும்ராவுடன் இணைந்து பந்துவீச ஆர்வமாக இருக்கிறேன்” - மும்பையால் விலைக்கு வாங்கிய ஜெரால்ட் கோட்ஸீ!

2024 ஐபிஎல் ஏலத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸீயை மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.
bumrah - gerald
bumrah - geraldX

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலத்தில் 333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். தொடக்கம் முதலே அதிரடி ஏலத்தில் மிரட்சியை ஏற்படுத்திய மினி ஏலம், எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு சென்ற வீரர்களை கண்டுள்ளது. பல இளம் இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு சென்றுள்ளனர்.

Gerald
Gerald

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஜெரலாட் கோட்ஸீ, தில்சன் மதுசங்கா, முகமது நபி மற்றும் நுவான் துஷாரா போன்ற பல முக்கியமான வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக கோப்பை வெல்லாமல் இருந்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இவர்களின் வருகையால் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸீ, பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவதற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மும்பை அணியில் பும்ராவுடன் இணைந்து பந்துவீச காத்திருக்கிறேன்!

மும்பை இந்தியன்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டது குறித்து வீடியோவில் பேசியிருக்கும் ஜெரால்ட் கோட்ஸீ, “ 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். வான்கடே மைதானத்தில் நீலம் மற்றும் தங்க நிறத்தில் பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவதற்கு இப்போதே காத்திருக்க முடியவில்லை. இது உண்மையில் அற்புதமாக இருக்கப்போகிறது” என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெரால்ட் கோட்ஸீ, வெறும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். தற்போது இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

வர்த்தகம்: ரொமாரியோ ஷெப்பர்ட் (LSG-லிருந்து), ஹர்திக் பாண்டியா (GT-ல் இருந்து)

2024 மினி ஏலம்: ஜெரால்ட் கோட்ஸீ (5 கோடி), தில்சன் மதுசங்கா (4.60 கோடி), நுவான் துஷாரா (4.8 கோடி), முகமது நபி 91.50 கோடி), ஸ்ரேயாஸ் கோபால் (20 லட்சம்), நமன் திர் (20 லட்சம்), அன்ஷுல் கம்போஜ்(20 லட்சம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com