அரசியலில் இருந்து விலகும் கவுதம் காம்பீர்... காரணம் இதுதான்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் அரசியலில் இருந்து விலக உள்ளார்.
கவுதம் காம்பீர்
கவுதம் காம்பீர்புதிய தலைமுறை

ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான பணிகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் அரசியலில் இருந்து விலக உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி கிழக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் கவுதம் காம்பீர். இத்தேர்தலில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பியாக தேர்வானார்.

தற்போது டெல்லி கிழக்குத் தொகுதியின் எம்.பியாக இருக்கும் அவர், கிரிக்கெட்டில் மீண்டும் தனது கவனத்தைச் செலுத்த உள்ளதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜெ.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கவுதம் காம்பீர்
பாஜக-வில் இணையவிருப்பதாக வெளியான தகவல்! உண்மை என்ன? உடைத்த யுவராஜ் சிங்!

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 'கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால், அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி. ஜெய்ஹிந்த்' என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது தெரிகிறது. மறுபுறம், வரவிருக்கும் 2024 தேர்தலில் காம்பீருக்கு தொகுதி வழங்கப்படாது எனவும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டதாலேயே அவர் அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com