"அந்த விஷயமெல்லாம் தோனி ஒருவரால் மட்டும்தான் முடியும்!" - கவுதம் கம்பீரா இப்படி புகழ்வது!!

ஒரு வீரர் நம்பர் 7-ம் இடத்தில் களமிறங்கி கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுப்பதெல்லாம் தோனி ஒருவரால் மட்டுமே இந்தியாவிற்கு சாத்தியமானது என்று கவுதம் கம்பீர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
MS Dhoni - Gautam Gambhir
MS Dhoni - Gautam GambhirTwitter

முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியை பற்றி கவுதம் கம்பீர் பேசுவதெல்லாம் புதிய விசயமல்ல. ஆனால் அவரை பாராட்டி பேசுவதும், அவருடைய தனித்திறமையை முன்னிறுத்தி பேசுவதை எல்லாம் கவுதம் கம்பீர் தான் செய்கிறாரா? என்ற கேள்வியை பல இந்திய ரசிகர்கள் எழுப்பாமல் இருக்க மாட்டார்கள்.

அந்தளவு “தோனி சொல்லும் வரை 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான் 100 ரன்களை நெருங்கிவிட்டேன் என எனக்கு தெரியாது. தோனி மட்டும் தான் உலகக்கோப்பையை வாங்கி கொடுத்தாரா? தோனியின் அந்த ஒரு சிக்சரை தான் எல்லோரும் பெரிதாய் பேசுகிறார்கள், கோப்பையை வென்றது தோனி ஒருவர் மட்டும் அல்ல” என தோனியை குறித்து பல முரன்பட்ட கருத்துகளை கவுதம் கம்பீர் பதிவு செய்துள்ளார்.

ஆனால், சமீப காலங்களாக தோனியின் கேப்டன்சி குறித்தும், தோனியின் தனித்திறன் குறித்தும் கவுதம் கம்பீர் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், தற்போது தோனி குறித்து பேசியிருக்கும் கவுதம் கம்பீர், தனிப்பட்ட பெருமை மற்றும் சாதனையை விட அணியின் வெற்றிக்கு முன்னுரிமை அளித்த ஒரு தன்னலமற்ற கேப்டன் தோனி என்று அவரைப் பாராட்டி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ​​

கேப்டன்சி பொறுப்புகள் தோனியின் பல சாதனைகளை தடுத்துவிட்டது! - கம்பீர்

தோனி கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் பல சாதனைகளை பதிவு செய்திருப்பார் என கூறியிருக்கும் கம்பீர், “கேப்டன்சியின் காரணமாக தோனியால் அவருடைய பேட்டிங் திறனுக்கான சாதனையை படைக்க முடியாமல் போய்விட்டது. கேப்டனாக இருந்தால் பல நேரங்களில் உங்களால் அணிக்காக மட்டுமே யோசிக்க முடியும், அணியையே முதலில் முன்னிறுத்த தோன்றும். ஒருவேளை எம்எஸ் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருப்பார்.

MS Dhoni
MS Dhoni

அப்படி அவர் டாப் ஆர்டரில் தொடர்ந்து விளையாடியிருந்தால் பல ODI சாதனைகளை அவரால் முறியடித்திருக்க முடியும். தோனி கேப்டனாக நிறைய கோப்பைகளை வென்றுள்ளார், ஆனால் அதற்காகவெல்லாம் ஒரு பேட்ஸ்மேனாக சர்வதேச ரன்கள் அடிப்பதில் அணிக்காக தியாகம் செய்தார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கமெண்டரியின் போது பேசியுள்ளார்.

தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த வரம்! - கவுதம் கம்பீர்

கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் முதலில் விக்கெட் கீப்பிங் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் பேட்டராக பார்க்கப்படுவார்கள். ஆனால் தோனியை பொறுத்தவரையில் அவர் முதலில் முழுமையான பேட்ஸ்மேன், பின்னர் தான் அவர் விக்கெட் கீப்பர் என்று பாராட்டி பேசியிருக்கும் கம்பீர், தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரம் என குறிப்பிட்டுள்ளார்.

dhoni-gambhir
dhoni-gambhir

தோனியின் தனித்திறன் குறித்து பேசியிருக்கும் கம்பீர், “முன்பு இருந்த விக்கெட் கீப்பர்கள் எல்லாம் முதலில் கீப்பர்களாகவும், பின்னர் பேட்டிங் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தனர். ஆனால் எம்எஸ் தோனி முதலில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தார், பின்னர் தான் விக்கெட் கீப்பராக இருந்தார். தோனி போன்ற வீரர் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். 7-வது இடத்தில் களமிறங்கி போட்டிகளை வெல்லக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டர் கிடைப்பதெல்லாம் மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஒருவரை நாங்கள் பெற்றோம், அந்த ஆற்றல் தோனியிடம் இருந்தது” என்று கம்பீர் புகழ்ந்து பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com