“டி20 உலகக்கோப்பை வெல்ல டிராவிட் இருக்க வேண்டும்” - பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து கம்பீர்!

டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் ராகுல் டிராவிட் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
gautam gambhir - dravid
gautam gambhir - dravidweb

சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.

rahul dravid
rahul dravidPT

ராகுல் டிராவிட்டின் பதவி நீட்டிப்பு குறித்து பேசிய ஜெய்ஷா, “ உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெறுவதெல்லாம் சாதாரண விசயம் கிடையாது. ஒரு சரியான பாதையில் இந்திய அணியை வழிநடத்தியதற்காக நாம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாராட்ட வேண்டும். நாங்கள் ராகுல் டிராவிட்டை ஒரு தலைமை பயிற்சியாளராக முழுவதுமாக ஆதரிக்கிறோம். தொடர்ந்து அவர் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

Rahul Dravid | Rohit Sharma | Ravichandran Ashwin
Rahul Dravid | Rohit Sharma | Ravichandran Ashwin

இந்நிலையில் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர், டி20 உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில் டிராவிட் நீடித்திருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

டிராவிட் எடுத்திருப்பது சிறந்த முடிவு! - கவுதம் கம்பீர்

ராகுல் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து பேசிய கவுதம் கம்பீர், “ டி20 உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தலைமை பயிற்சியாளர் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்ஸ் அனைவரையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. ராகுல் இதை ஏற்றுக்கொண்டது நல்லது.

டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நமக்கு 7 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. நாம் தொடர்ந்து அதிரடியான கிரிக்கெட்டை ஆடிவருகிறோம். எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது” என்று ஏஎன்ஐ உடன் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com