கம்பீர் என்னை 'ஃபிக்ஸர்' என்று அழைத்தார்... மீண்டும் சர்ச்சையில் கம்பீர்..!

"நான் உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர். எனது தாழ்மையான வேண்டுகோளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள்" என்று ஸ்ரீசாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த்PTI

சூரத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (LLC) போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட தகராறில் பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய பேட்ஸ்மேனுமான கவுதம் கம்பீர் தன்னை "ஃபிக்ஸர்" என்று பல முறை அழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தியா கேபிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் போட்டியின் போது ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பிறகு, கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் காரணமின்றி சண்டை போடுவதாகவும், சீனியர்களை கூட அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

"மிஸ்டர் ஃபைட்டருடன் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். " என்று கேரளாவைச் சேர்ந்த வீரர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீரு பாய் உள்ளிட்ட தனது மூத்த வீரர்களை கூட அவர் மதிப்பதில்லை . "அதுதான் இன்றும் நடந்தது. நான் அவரை சீண்டவே இல்லை. ஆனாலும், கவுதம் கம்பீர் சொல்லக் கூடாத மிகவும் மோசமான ஒரு விஷயத்தை வைத்து, என்னை அழைத்துக் கொண்டே இருந்தார்.

LCC எலிமினேட்டரின் போது கம்பீர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரிக்காக ஸ்ரீசாந்தை அட்டாக் செய்த பின்னர் இந்த சம்பவம் நடந்தது. அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பு, இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நடந்ததை வெளிப்படுத்திய ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்
INDvAUS | இந்தியா vs ஆஸ்திரேலியா தொடரில் அசத்திய டாப் 4 பௌலர்கள் யார்?

கிரிக்கெட் விளையாடும் பாக்கியம் உட்பட வாழ்க்கை எனக்கு வழங்கிய அற்புதமான வாய்ப்புகளுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்பையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறேன். வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் என்னால் முடிந்ததை தொடர்ந்து செய்வேன். கடவுளின் அருளால் இரண்டு உலகக் கோப்பைகளை வெல்லும் பாக்கியம் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு சாதாரண நபர் நான். தவறான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு அவர்களின் நியாயமான விளைவுகள் கிடைக்கும் என்று நம்புங்கள்" என்று ஸ்ரீசாந்த் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது" நிறைய சேனல்கள் என்னை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டு வருகின்றன. தவறான செய்தியைப் பரப்ப நான் நிறைய PR செலவழிக்கப் போவதில்லை. என்ன நடந்தது என்பதை விவரிக்கவே நேரலைக்கு வர விரும்பினேன். எனது குடும்பத்தினர், என் அன்புக்குரியவர்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆதரவுடன் நான் தனியாக எனது போராட்டங்களை நடத்தியுள்ளேன்.

"நான் ஒரு கெட்ட வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. நான் அவரை ஒரு துஷ்பிரயோகம் கூட செய்யவில்லை. நான் 'என்ன சொல்கிறாய்?' என்றுதான் கேட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' உண்மையில், அவர் என்னை 'ஃபிக்ஸர், ஃபிக்ஸர், ஃபிக்ஸர்' என்று அழைத்ததால் நான் கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். மிகவும் மோசமாக பேசத் தொடங்கியதால், நடுவர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றார்கள். அப்போதும் அவர் அதையே கூறினார். நான் விலகிச் சென்றேன், ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக அழைத்தார்."

அவர் 'சிக்ஸர், சிக்ஸர், சிக்ஸர்' என்று சொன்னதாக அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள். 'ஃபிக்ஸர், ஃபிக்ஸர், ஃபிக்ஸர்' என்றார். பேசுவதற்கான மொழி இதுவல்ல. நான் உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர், எனது தாழ்மையான வேண்டுகோளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள். நிறைய அன்பு, நிறைய மரியாதை. ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

"என் குடும்பம், என் மாநிலம், எல்லோரும் நிறைய அனுபவித்திருக்கிறார்கள். உங்கள் அனைவரின் ஆதரவோடு அந்தப் போரை நடத்தினேன். இப்போது மக்கள் எந்த காரணமும் இல்லாமல் என்னை வீழ்த்த விரும்புகிறார்கள். அவர் சொல்லக்கூடாத விஷயங்களைச் சொன்னார். அவர் சொன்னதை நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன்" என்றார். 2013 ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கியதைக் குறிப்பிட்டு ஸ்ரீசாந்த் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com