“அந்த இந்திய வீரரை அவுட்டாக்குவது மிகவும் எளிது; ஆனால்”- யாரை கூறுகிறார் பாக். முன்னாள் வீரர் ரானா?

இந்திய அணி உடனான ஒருநாள் தொடர் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ரானா, முன்னாள் இந்திய வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.
Rana Naved-ul-Hasan
Rana Naved-ul-HasanTwitter

இந்தியா - பாகிஸ்தான் என்றாலே ஒரு போட்டி என்றால் கூட அனல்பறக்கும் போட்டியாகவே அமையும். அந்தவகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாட்டு ரசிகர்கள் கூட தங்களுடைய அணி மற்ற போட்டிகளை விட இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்றே நினைப்பார்கள். அதனால் தான் தற்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Sachin - Sehwag
Sachin - Sehwag

ஒரு போட்டிக்கே இப்படி என்றால் முன்னர் 3 முதல் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் எல்லாம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது அனைத்து போட்டிகளும் மறக்கமுடியாத போட்டிகளாகவே அமைந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய தொடர்களும், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடிய தொடர்களும் இரண்டு நாட்டு ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத ஒன்றாகவே தற்போதும் நினைவில் இருக்கும். இந்நிலையில் 2004-2005ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் தொடர் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், பல சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

"உனக்குலாம் விளையாடவே தெரியாது! Pak-ல இருந்திருந்தா வாய்ப்பே கிடைச்சிருக்காது!"

நாதிர் அலி பாட்காஸ்டில் (Podcast) பேசியிருக்கும் ரானா, 2004-2005ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். மேலும் அந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்கை எப்படி தந்திரமாக வீழ்த்தினார் என்பதையும் பகிர்ந்துள்ளார்.

Rana Naved-ul-Hasan
Rana Naved-ul-HasanNadir Ali podcast

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் உங்களிடம் ஒரு சம்பவம் சொல்கிறேன். 2004-05 இல் நடைபெற்ற சுவாரசியமான ஒருநாள் தொடர் குறித்து நான் பேசுகிறேன். நான் அந்தப் போட்டியில் விளையாடி இருந்தேன். தொடரில் நாங்கள் 2-0 என பின்தங்கி இருந்தோம். தொடரின் மூன்றாவது போட்டியில் சேவாக் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார். அவர்கள் கிட்டத்தட்ட 300 ரன்களை எடுத்தார்கள், சேவாக் 85 ரன்களை நெருங்கிவிட்டார். நான் இன்ஷமாம் பாயிடம் என்னிடம் பந்தைக் கொடுக்கச் சொன்னேன். நான் மெதுவாக பவுன்சரை வீசினேன்” என்று நவேத்-உல்-ஹசன் கூறினார்.

Rana Naved-ul-Hasan
Rana Naved-ul-Hasan

சேவாக்கை வெளியேற்ற ஒரு தந்திரம் செய்தேன், அது பந்துவீச்சாளர்களின் பொதுவான தந்திரமாகும். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சேவாக்கிடம் சென்று, “உங்களுக்கு விளையாடத் தெரியாது. நீங்கள் பாகிஸ்தானில் இருந்திருந்தால், உங்களுக்கெல்லாம் சர்வதேச அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது”என்று கூறினேன். அவரும் பதிலுக்கு சில வார்த்தைகளை கூறினார். நான் மெதுவாக இன்ஸி பாயிடம் சென்று அவர் அடுத்த பந்தில் வெளியேறிவிடுவார் என்று கூறினேன். அவருக்கு எதுவும் புரியவில்லை. அடுத்த பந்தை நான் ஒரு ஸ்லோவர் டெலிவரியாக வீசினேன். சேவாக் அதை ஆவேசமாக அடிக்க சென்று காற்றில் அடித்துவிட்டு கேட்ச் ஆகி வெளியேறினார்” என்றார்.

சேவாக்கை வெளியேற்றுவது ஈசி..ஆனால் அவரை வெளியேற்றுவது கடினம்!

மேலும் சேவாக் குறித்து பேசிய அவர், “சேவாக்கை ஆட்டமிழக்க செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அதையே டிராவிட்டுக்கு செய்தால் அவரை எளிதாக வெளியேற்ற முடியாது. ராகுல் டிராவிட்டுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம்" என்று நவேத்-உல்-ஹசன் கூறினார்.

Sehwag - Dravid
Sehwag - Dravid

அந்த போட்டியில் ரானா சேவாக்கை வெளியேற்றிய போதிலும், விசாகப்பட்டினத்தில் இந்தியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com