இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி காலமானார்.
Bishan singh bedi
Bishan singh bedipt desk

1966ல் தொடங்கி 1978 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இந்திய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

bishan singh bedi
bishan singh bedipt desk

பேடி, பிரசன்னா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்துள்ளனர். இந்திய அணி பெரும்பாலான அணிகளுடன் விளையாடும்போது, முக்கிய விக்கெட்டுகள் அனைத்தையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். அந்த அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.

மிகவும் தையமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர் பிஷன் சிங் பேடி. தன்னுடைய சக கிரிக்கெட் வீரர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரோடும் சகஜமாக பழகக்கூடியவர். 77 வயதான இவர், சமீபத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 266 விக்கெட்களை எடுத்துள்ளார்.

bishan singh bedi
bishan singh bedipt desk

இந்திய அணியின் முக்கிய வீரராக இடம்பெற்றிருந்த அவரது மறைவு இந்திய கிரிக்கெட் உலகிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் விசயமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com