\
For the first time in 149 years of Aus fielded a starting XI is aged 30+
aus vs sareuters

149 ஆண்டுகளில் முதல்முறை.. ஆஸ்திரேலியா படைத்த அரிய சாதனை!

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நிக் மேடிசன் களமிறக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 49 நிமிடங்கள் களத்தில் நின்று 33 பந்துகளைச் சந்தித்து ரன் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 149 ஆண்டுகளில் முதல்முறையாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி, புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 11 வீரர்களை கொண்ட ஒரு அணியில் அனைத்து வீரர்களுமே 30 வயதை கடந்தவர்களாக இருந்த சாதனை நிகழ்வு அரங்கேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அவ்வணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 149 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்தப் போட்டியில் களம் கண்ட 11 வீரர்களுமே 30 வயதைக் கடந்தவர்கள் என்ற அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த ஆடும் லெவனில் மிக இளைய வீரர் மேட் ரென்ஷா (30 வயது) ஆவார். மிக மூத்த வீரர் நாதன் லயன் (38 வயது). நாதன் லயன் (38), ஸ்டீவ் ஸ்மித் (37), மிட்செல் ஸ்டார்க் (36), அலெக்ஸ் கேரி (35), ஜோஷ் ஹேசில்வுட் (35) ஆகிய 5 வீரர்கள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.

aus vs sa
aus vs sareuters

இந்த ஆடும் லெவனின் சராசரி வயது 34.59 ஆகும். இது கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா களமிறக்கிய மிக மூத்த அணியாகும். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 வீரர்களும் 30+ வயதாக இருப்பது இது 7-ஆவது முறை ஆகும். முன்பு இங்கிலாந்து 1921-லும், நியூசிலாந்து 2022-2023 காலகட்டத்தில் மூன்று முறையும் இவ்வாறு களமிறங்கியுள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு இதுவே முதல்முறையாகும். 34 வயதான நிக் மேடிசன் தொடக்க ஆட்டக்காரராக அணிக்குத் திரும்பியதே, ஆடும் லெவனில் 30 வயதுக்குட்பட்ட எந்தவொரு வீரரும் இல்லாமல் போனதற்கு முதன்மை காரணமாக அமைந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே அவர் களமிறக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 49 நிமிடங்கள் களத்தில் நின்று 33 பந்துகளைச் சந்தித்து ரன் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com