Sanju Samson
Sanju SamsonX Page

INDvsSA | சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்.. அபார வெற்றியடைந்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டர்பனில் நடைபெற்ற போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்ய, தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், சிக்சர் மழை பொழிந்து வாணவேடிக்கை காட்டினார். அவர் 50 பந்துகளில் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடித்து 107 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 202 ரன்கள் சேர்த்தது.

IND vs SA
IND vs SA

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 17 புள்ளி 5 ஓவர்களில் வெறும் 141 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Sanju Samson
ICC சாம்பின்ஸ் டிராபி | இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா? சிகப்பு கொடி காட்டியது பிசிசிஐ!

இந்த வெற்றியின் மூலம் 4 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com